2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திவிநெகும உத்தியோகத்தர்களுக்கான 7,000 வெற்றிடங்கள் உள்ளன: அமீர்அலி

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கையில் திவிநெகும திணைக்களத்தில் திவிநெகும உத்தியோகத்தர்களுக்கான 7,000 வெற்றிடங்கள் உள்ளதாகவும் அவற்றினை நிரப்பும் வகையிலான போட்டிப்பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளதாகவும் சமூர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

அதேபோன்று, நிலவும் முகாமையாளர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சைகளையும் நடாத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேசத்துக்குட்பட்ட சமுர்த்தி திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான சந்திப்பு புதன்கிழமை(01) நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் திவிநெகும திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.குணரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர்அலி, மட்டக்களப்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது திவிநெகு திணைக்களத்தின் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் திவிநெகு திணைக்களத்தின் குறைபாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன் திவிநெகும திணைக்களத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் இனிவரும் காலத்தில் செயற்படவேண்டியவை தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

இதன்போது திவிநெகும திணைக்களத்தின் அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

அத்துடன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவந்த மோட்டார் சைக்கிள் விநியோகத்தில் பெண்களுக்கான சைக்கிள்கள் வழங்கப்படாதது தொடர்பில் இங்கு உத்தியோகத்தர்களினால் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

மூன்றாம் கட்டமாக மோட்டார் சைக்கிள் வழங்கு நடவடிக்கை விரைவில் நடைபெறும் என்றும் அதன்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

அத்துடன் சிங்கள மொழியல் சுற்றறிக்கைகள் அனுப்பிவைக்கப்படுவது தொடர்பில் உடனடியாக தமிழ்மொழியிலும் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் இங்கு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X