2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீடமைப்பு திட்டத்தின் கீழ் காசோலைகள் வழங்கி வைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் நாடளாவிய ரீதியில் வீடற்றவர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகளை அமைக்கும் 'சமட்ட செவன' நிகழ்ச்சித்திட்டத்தில், வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட 02ஆவது நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 318 பயனாளிகளுக்கு வீடமைப்பதற்காக முதற்கட்டமாக இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஒரு பயனாளிக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 318 பயளாளிகளுக்கும் வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக இருபதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மிகுதித்தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்,  பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், அதிதிகளாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எல்.பலன்சூரிய  ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம்.கே.முஹைதீன், பிரதேச செயலாளர்கள், உதவி திட்டப் பணிப்பாளர்கள் வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X