2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கேஸ் அடுப்பு வெடித்ததில் ஹோட்டலில் தீ

Gavitha   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் கேஸ் அடுப்பு வெடித்ததில் ஹோட்டலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி 2ஆம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள தாஜ் ஹோட்டலின் முன் பகுதியிலுள்ள ரொட்டி போடும் இடத்தில் கேஸ் அடுப்பு வெடித்ததில் ஹோட்டலில் தீப்பிடித்தது.

இதனால் ஹோட்டலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்து பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.

இதையடுத்து ஹோட்டலின் மற்றைய பகுதிக்கு தீயை பரவவிடாமல் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முயற்சி செய்ததுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X