Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எஸ்.எம்.அறூஸ்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதி சிறைவாசம் அனுபவித்த சித்தாண்டியைச் சேர்ந்த உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்காக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள நன்றி நவிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த யுவதியின் விடுதலையானது, வயதான அவரது தாயின் கண்ணீரையும் குடும்பத்தாரின் துயரத்தையும் துடைத்துள்ளது. உதயசிறியின் குடும்பத்தினர் அவளது விடுதலையை எதிர்பார்த்து மன மகிழ்வில் இருக்கும் போது எமக்கு அது மகிழ்ச்சியை தருகின்றது.
இந்த ஏழை யுவதிக்கு ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு நாட்டில் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.
உதயசிறியின் விடுதலைக்காக இன, மத, மொழி, பேதமில்லாது குரல் கொடுத்த அனைத்து நல்லெண்ணம் கொண்டவர்களுக்கும் அமைப்புக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஊடகங்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உதயசிறியின் விடுதலைக்காக, கிழக்கு மாகாண முதலமைச்சர் கடந்தவாரம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago