Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 05 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
நாடாளுமன்ற சம்பிரதாயம் தொடர்பான இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத, தமிழன் ஒருவர் இந்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவராக வருவதை ஜீரணிக்க முடியாத இனவாதிகள் தான் இன்றைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாளராக இருக்கின்றார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைந்துள்ள இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவி குறித்துத் தோன்றியுள்ள சர்ச்சை குறித்துக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற சம்பிரதாயங்களுடனானதும் ஒரு கௌரவம் மிக்கதுமான பதவியே எதிர்க்கட்சித் தலைவர் பதவியாகும். பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாய அடிப்படையிலேயே எமது எதிர்கட்சித் தலைவர் பதவியும் அமைகின்றன.
இத்தகைய எதிர்கட்சித் தலைவர் பதவி அண்மைய அரசியல் சதுரங்க நகர்வுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தலைவருக்கு அமையவிருக்கின்றது.
பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாய அடிப்படையில் ஆட்சியமைக்கும் கட்சிக்கு அடுத்த பெரும்பான்மை கட்சியினையே எதிர்க்கட்சியாகவும் அதன் தலைவரையே எதிர்க்கட்சி தலைவராகவும் அங்கீகரித்தல் வேண்டும்.
அந்த வகையில் தற்போது நாடாளுமன்றத்தில் பொதுஜன ஜக்கிய முன்னணி பெரிய கட்சியாகவும் ஜக்கிய தேசியக்கட்சி இரண்டாவது கட்சியாகவும் மூன்றாவது பெரிய கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவும் இருக்கின்றன. ஜனாதிபதியே பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர்.
அமைச்சரவையில் பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்துள்ள இன்றைய நிலையில், அரசாங்கம் என்பது பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்ததாகவே அமைந்துள்ளது. எனவே இருகட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்ததனால் மூன்றாவது பெரியகட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்க்கட்சியாக இருக்கவேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துவது, சம்பிரதாயபூர்வமான கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இந்நாட்டில் தமிழ் மக்கள் உரிமையானவர்கள் அல்ல என்பதுவே ஆகும்.
உண்மையில் இன்று தமிழர்கள் கடவுளாலும் காப்பாற்றப்பட முடியாத நிலைமையிலேயே இருப்பதாகவே நாட்டு நடவடிக்கைகள் கட்டியம் கூறுகின்றன. ஜனவரி எட்டுக்கு முந்திய நிலைமைதான் இப்படி என்றால் ஜனவரி எட்டுக்குப் பிந்திய நிலைமையும் அதுவேதானா?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago