Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 05 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவு செய்யப்பட்டனர்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்ற பெயரில் இயங்கி வந்த ஊடகவியலாளர் அமைப்பு, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனம் என மறு சீரமைக்கப்பட்டு இன்று அதன் பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்ற போதே, இதற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் தலைவராக தேவ அதிரன், செயலாளராக ரி.எல்.ஜௌபர்கான், பொருளாளராக சிவம் பாக்கியநாதன், உப தலைவர்களாக எம்.சகாப்தீன், எம்.எஸ்.எம்.நூர்தீன், உப செயலாளர்களான எஸ்.பேரின்பராசா, எஸ்.வரதராஜ், ஊடக இணைப்பாளர்களாக எஸ்.எச்.எம்.சர்மிளா, எஸ்.நிலாந்தன் உட்பட நிருவாக குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கியதாக செயற்படவுள்ள இந்த அமைப்பில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஊடகவியலாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
33 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
8 hours ago
9 hours ago