2025 மே 19, திங்கட்கிழமை

'புதிய அரசாங்கத்துக்கான எண்ணம் இல்லாவிடின் ஆட்சி மாற்றம் இல்லை'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இந்த நாட்டின் தமிழ் மக்கள் மனதில் புதிய அரசாங்கத்தை  ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்காவிட்டால்,  ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு,  காஞ்சிரங்குடா பிரதேச தமிழரசுக் கட்சி கிளைக் கூட்டம்,  காஞ்சிரங்குடா சிவன் கோவில் முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இனிமேல் இந்த நாட்டில் இனவாதமோ, மதவாதமோ பேசமுடியாது. சகோதரத்துவமாக, சமமானதாக வாழக்கூடிய  சமூதாயத்தை இந்த நாட்டில் உருவாக்கவேண்டும் என்று புதிய அரசாங்கம் எண்ணியுள்ளது.

அத்துடன், நாங்கள் வாழ்வதாக இருந்தால்,  அரசாங்கத்திலிருந்து பெறக்கூடிய அனைத்து நன்மைகளையும் பெறமுடியும்.
மீள்குடியேற்றம்  இடம்பெற்றுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின்  சில பகுதிகளில் இன்னும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.

தற்போது  நாங்கள் நல்லதொரு  தலைவரை பெற்றிருந்தாலும்,  அவரின் அரசியல் நடவடிக்கைகளை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்' என்றார்.

இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும்  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X