2025 ஜூலை 19, சனிக்கிழமை

வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதிகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி வை.வசந்தகுமார், திங்கட்கிழமை (06) தெரிவித்தார்.  

மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேலின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் இவ்வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பழுதடைந்த நிலையில் காணப்படும் 37 வீதிகள் மேற்படி பிரதேச சபையின் நிதியில் ஒரு மில்லியன் ரூபாய் செலவிலும் அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையார் அலுவலகத்தின் அனுசரணையில் 17 வீதிளும்  புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி வை.வசந்தகுமார் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X