2025 ஜூலை 19, சனிக்கிழமை

சமுதாய மட்ட இலகுபடுத்துனர்களுக்கான ஆரம்பக்கட்ட பயிற்சிநெறி

Thipaan   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு, வவுணதீவு மற்றும் ஏறாவூர்பற்று ஆகிய பகுதிகளில், அனர்த்த ஆபத்துக் குறைப்பு சேவையில் ஈடுபடவுள்ள  சமுதாய மட்ட இலகுபடுத்துனர்களுக்கான ஆரம்பக்கட்ட பயிற்சிநெறி, இலங்கைச் செஞ்சிலுவைச் கங்கத்தின் மட்டக்களப்பு கிளைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (06) நடைபெற்றது.

இதன்போது கிராம மட்டத்தில் இலகுபடுத்துனர்களாக செயற்படவுள்ள 15 தொண்டர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் த.வசந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளை நிறைவேற்று உத்தியோகத்தர் வி.பிறேமகுமார், திட்ட இணைப்பாளர் எஸ்.சசீந்திரன், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஏ.ஜனார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.

கிராம மட்டத்தில் அனர்த்த ஆபத்து குறைப்பு வேலைகளை எவ்வாறு முன்னெடுப்பது, மக்கள் மத்தியில் எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அனர்த்த ஆபத்து வேளைகளில் எவ்வாறு செயற்படுவது போன்ற பல விடயங்கள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X