2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விமானப்போக்குவரத்தை விஸ்தரிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாத்துறையினரின் நன்மை கருதி  மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான விமானப்போக்குவரத்தை   மேலும் விஸ்தரிக்க   நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடுகின்ற  சீ பிளேன்  சேவையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நேற்று திங்கட்கிழமை மாலை பார்வையிட்டார்.

கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான சேவையில் ஈடுபட்டுவருகின்ற  இந்த  சீ பிளேனில் கிழக்கு மாகாண முதலமைச்சர், கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு நேற்றையதினம் பயணித்தார். அத்துடன், இந்த சேவையின் விரிவாக்கம் பற்றியும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாத்துறையினரின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வருகையை அதிகரிக்கும் பொருட்டு விமான சேவை நடைபெற்றவருகின்றது. அதிலும் குறிப்பாக,  கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுவரும் சீ பிளேன் சேவை சிறந்த சேவையை வழங்கிவருகின்றது.  வாராந்தம் நான்கு தினங்கள் இந்த சேவை நடைபெற்றுவருகின்றன.  

இதை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றேன். அதேபோன்று, மட்டக்களப்பிலுள்ள உள்ளூர்  விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X