2025 ஜூலை 17, வியாழக்கிழமை

' சுமுக நிலை கிடைப்பதை கருத்திற்கொண்டு ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவு வழங்கினோம்'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

'நாம் மத்தியில் அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்காக ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவு வழங்கவில்லை. எமது கொள்கையின் நிமித்தம் எமது மக்களுக்கு ஒரு சுமுக நிலை ஏற்படுத்தப்படும் என்ற காரணத்தை கருத்திற்கொண்டு புதிய ஜனாதிபதிக்கும் ஆட்சி மாற்றத்துக்கும் ஆதரவு வழங்கினோம்' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர்  மண்முனை மேற்கு பிரதேச பொதுமக்களினால் நேற்று திங்கட்கிழமை (06) கௌரவிக்கப்பட்டனர். கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'தமிழ் மக்களாகிய நாம், பல இன்னல்களுக்கு மத்தியில் இந்த நாட்டில்  வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தற்போது மாறியுள்ள இந்த அரசாங்கத்தின் மூலமும் கடந்த அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்ட விடயங்கள் தொடர்ந்தவண்ணம் இருப்பதை நாம் காண்கின்றோம்' என்றார்.  

'கடந்த போராட்ட காலத்திலும் சரி, கடந்த அரசு நிலவிய 10 வருடங்களாகவும் நாம் அனுபவித்த தாங்கொணா வேதனைகளை சகித்துக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே, தற்போது நிலவுகின்ற ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஒன்றுதிரண்டோம்.

எம்மால் தெரிவுசெய்யப்பட்ட இந்த அரசாங்கமும் அதன் தலைமையும் அதுபோன்ற வேதனைகளை எமது மக்களுக்கு சுமத்த முனைவதை தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு எப்போதும் பார்த்துக்கொண்டிருக்காது. நாம் அதனை எப்போதும் தட்டிக்கேட்பவர்களாக இருப்போம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X