2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திருமுறை மாநாடு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்தும் திருமுறையும் சைவத்திருநெறியும் எனும் திருமுறை மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஷ்வரன் தலைமையில் இந்த மாநாடு  நடைபெற்றது.

இந்த மாநாட்டில் திருப்பனந்தாள், காசித்திருமடம் இணை அதிபர் தவத்திரு. சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் ஆன்மிக அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது சுவாமிக்கு பாத பூஜைகள் செய்யப்பட்டு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் 'திருமுறையும் சைவத்திருநெறியும்' என்ற சொற்பதத்தில் சொற்பொழிவை தமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகம் பேராசிரியர் அரங்க இராமலிங்கம், தமிழ்நாடு பேராசிரியர் கி.சிவகுமார், பண்ணிசை, தமிழ்நாடு திருமறைக் கலாநிதி கலைமாமணி திருத்தணி சுவாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.

எனவே திருமுறை மாநாட்டுக்கு இந்துக்குருமார்கள், இந்து ஆலய அறங்காவலர்கள், அறநெறிப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சாதாரண தர, உயர்தர மாணவர்கள், அறநெறிப் பாடசாலை மேற்பிரிவு மாணவர்கள், இந்து சமய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஏனைய இந்து சமய மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தற்போது கொழும்பிலும் திருமுறை மாநாடு நடத்தப்பட்டது. அதேபோன்று மட்டக்களப்பில் நடத்த வேண்டுமென்பதற்கிணங்க மட்டக்களப்பிலும் திருமுறை மாநாட்டை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X