2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'பெற்றோரும் பாடசாலை சமூகமும் இணைவதால்; சிறந்த வெளியீடுகளை பெறமுடியும்'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

பெற்றோரும் பாடசாலை சமூகமும் இணைந்து செயற்படுவதன் மூலமே பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியிலிருந்து சிறந்த வெளியீடுகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்று  மட்டக்களப்பு வலய உதவிக்  கல்விப் பணிப்பாளர் த.யுவராஜன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வலயத்துக்குட்பட்ட கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'எம்மால் முடியும் எழுந்துவருவோம்' என்னும் தலைப்பில் பாடசாலையின் பழைய மாணவர்களின் அனுசரணையுடன் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

இங்கு உரையாற்றிய உதவி கல்விப் பணிப்பாளர்,

'பாடசாலைகளில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளில் பெற்றோர் இணைந்து செயற்படும்போதே, அங்கு எதிர்நோக்கப்படும் சிக்கல்கள் தொடர்பில் அறியமுடியும்.

இன்று பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு அங்கு என்ன நடக்கின்றது என அறிய முற்படுவதில்லை. ஆனால் பிரச்சினைகள் எழும்போதே அவர்கள்; பாடசாலைக்கு செல்கின்றனர்.

பிள்ளைகளை நாங்கள் வீட்டில் வைத்திருக்கும்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம். அவற்றை  தீர்ப்பதற்கான வழிகளையும் ஆராய்கின்றோம்.அவ்வாறே பல பிள்ளைகளை கொண்டுள்ள பாடசாலைகளில் பிரச்சினைகள் எழும்போது நாங்கள் தீர்த்துவைக்க முன்னிற்கவேண்டும்.நாங்கள் ஆசிரியர்களுடன் அதிபருடன் இணைந்துசெயற்படவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X