2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கர்ப்பிணிகளுக்கு போஷாக்குப் பொதிகள்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ்.பாக்கியநாதன்

கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் சிறந்த போஷாக்கை  வழங்கும் நோக்குடன் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் உணவுப்பொதிகள், வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கர்ப்பிணிகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விநியோகி;க்கப்பட்டது.

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சினால் மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவுப்பொதிகள் 10 மாதங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் தற்போது பிரதேச செயலகங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுணதீவில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மாவட்ட முன்பிள்ளைப் பருவ இணைப்பாளர் வீ.முரளீதரன், முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் வீ.விஸ்வகோகிலன், சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.விமலசேகரம் ஆகியோரும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X