2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மகிழடி வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

வெள்ளத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட வீதிகளுள் ஒன்றான செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகிழடி வீதி புனரமைப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றன.

வெள்ள காலங்களில் அதிகமாகப் பாதிக்கப்படும் சித்தாண்டி பிரதேச மக்களின் போக்குவரத்து நன்மை கருதி சந்தணமடுப் பிரதேசத்துக்கு  செல்லும் மகிழடி வீதி, சதவக்க உயர் கால்வாய், கொட்டாரியா அணைக்கட்டு என்பன 59.25 மில்லியன் செலவில் புனரமைக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எஸ். மோகனராஜா தெரிவித்தார்.

றூகம் நீர்ப்பாசன பிரதேசத்துக்குட்பட்ட குறித்த வேலைகளின் நிதியை,  நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெறுவதாகவும் கூறினார்.

ஈரலக்குளம் பிரதேசத்தில் அதிகளவான நெல் வயல்கள், வட்டிவளைப் பிரதேசத்தில் செங்கல் உற்பத்தி செய்யும் வாடிகள் என்பன அமைந்துள்ளதனால் இவற்றிக்குச் செல்லும் ஒரே ஒரு வீதியான மகிழடி வீதியை புனரமைப்புக்கு தெரிவு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

புனரமைக்கப்படும் வீதியின் இருபாகங்களிலும் நெல் வயல்கள் உள்ளதனால் மேற்குறிப்பிட்ட வேலைகளினால் வயல்களில் மேலதிகமாக உள்ள நீர் எதிர்ப்பக்கங்களில் உள்ள வயல்களுக்கு வடிந்தோடுவதற்கு இலகுவாய் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X