2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கும் 02ஆம் கட்ட நிகழ்வு

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹூஸைன்

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் 02ஆம் கட்ட நிகழ்வு வியாழக்கிழமை (09) ஏறாவூரில் இடம்பெறவுள்ளதாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை தெரிவித்தார்.

ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட 103 மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் வீதம் புலமைப் பரிசில் நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றி தற்போது க.பொ.த. உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கே, மேற்படித் திட்டத்தின் கீழ் புலமைப் பரிசில் நிதி வழங்கப்படவுள்ளது. 

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி இந்த  வைபவத்தில் கலந்து கொண்டு புலமைப் பரிசில் நிதியியை வழங்கி வைக்கவுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X