Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
–ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பணிகளின் ஓரங்கமாக தவறாளர்களின் நன்னடத்தை பண்புகளை விருத்தி செய்து அவர்களை சமூக வாழ்வில் மீண்டும் இணைத்துக் கொள்வதற்காக தவறாளர்களுக்கும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்குமான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுவருவதாக சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகஸ்;தர் சுப்பிரமணியம் தயானந்தன் தெரிவித்தார்.
சமுதாய சீர்திருத்தத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'ஒழுக்கசீலமுள்ள சமுதாயமாக ஒட்டுமொத்த மனித குலமும் மாறவேண்டும். அப்பொழுது இந்த உலகம் அமைதிப்பூங்காவாக காட்சி தரும்.
தவறுகள் இடம்பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அடிப்படையில் பேராசை, பொறாமை, ஆத்திரம், கோபம் போன்ற காரணங்கள் தவறுகளின் தோற்றுவாயாக அமைந்திருக்கின்றது. இந்தப் பண்புகள் சில மனிதர்களை சிறைக்கூடம்வரை கொண்டுசேர்த்து விடுகின்றது.
பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வீட்டு வன்முறைகள் நாளாந்தம் பெருகிவருவதால் நீதிமன்றங்களிலும் வழக்குகள் குவிகின்றன.
இதனை தடுப்பதற்காக மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களின் நீதிபதிகளான என்.எம்.அப்துல்லாஹ் மற்றும் ஏ.எம்.எம்.றியாழ் ஆகியோரின் சிறப்பான ஆலோசனைக்கேற்ப குற்றச்செயல்களை குறைப்பதற்கான ஒரு வழிமுறையாக தவறாளர்களை சீர்திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
பெண்களின் உரிமைகளை மதித்தால் பெருமளவில் வீட்டு வன்முறைகளை குறைக்க முடியும். இந்த விழிப்புணர்வுகளை எல்லோரும் பெற்றிருக்க வேண்டும்' என்றார்.
இந்த நிகழ்வில் சமுதாயஞ்சீர்திருத்தத் திணைக்களத்தின் வேலைப் பரிசோதகர் எஸ்.ஜறோனிகா, தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரணி அருள்வாணி சுதர்ஷன், அதன் உளவளத் துணையாளர் ஜெயதீபா பத்மசிறி, மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி ஏ.சி.அப்துல் அஸீஸ், சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்;தர்களான பி.பரமசிவம், எஸ்.லிங்கேஸ்வரன் ஆகியோரும் தவறாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago
3 hours ago