2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குளத்தில் நீராடிய சிறுவன் முதலைக்குப் பலி

Kanagaraj   / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பானம்வெளி குளத்தில் நீராடிய மூன்று சிறுவர்களில் ஒருவன் முதலைக்குப் பலியாகியுள்ளான்.

வியாழக்கிழமை பகலளவில் இந்த மூன்று சிறுவர்களும் குளக்கரையில் நீராடிக்கொண்டிருக்கும் போது, நீரினுள் மறைந்திருந்த முதலையொன்று அதிசயராஜா ஜெயராஜ் (13) என்ற சிறுவனை இழுத்துச் சென்றுள்ளது.

சிறுவனின் சகோதரன்  குளிக்கச் சென்ற தனது தம்பியை தேடிச் சென்றபோது ஏனைய சிறுவர்கள் இருவரும் தங்களுடன் நீராடிய நண்பனான ஜெயராஜை முதலை இழுத்துச் சென்றது பற்றிக் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் குளத்தில் தேடியதில் முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சிறுவனின் இடது கால் முறிந்துள்ளதோடு உடலில் ஆங்காங்கே காயங்களும் காணப்படுகின்றன.

கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இச் சிறுவனின் தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தாய் மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X