Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
கிழக்கு மாகாணத்தில், அதிகளவான பாடசாலைகள் வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாகவும் சில பாடசாலைகள் அதிக வளங்களுடன் காணப்படுவதாகவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்துக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் வியாழக்கிழமை (9) விஜயமொனறை மேற்கொண்டிருந்தார். இதன்போது அப்பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
சில பாடசாலைகளில் வளங்கள் அதிகமாக இருந்தும் அதனை அப்பாடசாலைகள் பயன்படுத்தும் தன்மை குறைவாகவே காணப்படுகின்றது. இவை அனைத்தையும் நான் நேரடியாக சென்று அவதானித்தேன். இருக்கின்ற வளங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எது எவ்வாறாக இருந்தாலும் அதிக பாடசாலைகள் பாரிய வளப்பற்றாக்குறையுடன்தான் இயங்கி வருகின்றன.
இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினூடாக செய்யவேண்டிய அனைத்து விடயங்களையும் மேற்கொள்வதற்கு நான் தயாராக உள்ளேன்.
அந்த வகையில் களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்துக்கு மிகவும் முக்கியமாக தேவையாகவுள்ள விடயங்களை நான் அவதானித்துள்ளேன். அவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன்' என தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் இந்த விஜயமானது பாடசாலை சமுகத்தின் வேண்டுதலுக்கு அமைவாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளையின் அழைப்பின் போரில் இடம்பெற்றிருந்தது.
இவ்விஜயத்தின் போது வருகைதந்த கல்வி அமைச்சரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை கோ.கருணாகரம், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், பாடசாலை அதிபர் த.கனகசூரியம், ஆசிரியர்கள், மாணவரகள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் அகியோர் கலந்துகொண்டு அமைச்சரை வரவேற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
3 hours ago