2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி நகர சபை பிரிவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
காத்தான்குடி நகரசபை பிரிவில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளர் யு.எல்.எம்.என்.முபீன், வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.
 
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின்  அறுவுறுத்தலுக்கமைவாக, கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறூக், அலி ஷாஹீர் மௌலானா, நகர அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளர் யூ.எல்.எம்.எல்.முபீன், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் ஆகியோருடன் இங்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நேற்று பார்வையிட்டனர்.
 
காத்தான்குடிக்கான பஸ் தரிப்பு நிலையம், விக்டெரி பொது மைதானம், கடற்கரை அழகுபடுத்தல், ஆற்றங்கரைப்பூங்கா அமைத்தல், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான தனியான பூங்கா அமைத்தல், பூநொச்சிமுனையில் நீர் பூங்கா அமைத்தல் மற்றும் மழை நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோட முக்கியமான வடிகான்களை அமைத்தல் போன்றன இதன்போது காண்பிக்கப்பட்டன.
 
குறித்த வேலைகளை அவசரமாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், நகர அபிவிருத்தி அதிகார சபையினரைக் கேட்டுக்கொண்டார்.

அபிவிருத்தி அதிகார சபையின் சார்பாக பிரிகேடியர் ஜே.எம்.எஸ்.எஸ்.ஜயசுந்தர, கேர்ணல். சிட்சிறி, மேஜர். குணசேன, திட்டப் பணிப்பாளர் மகிந்த விதாரண, பிரதிப்பணிப்பாளர். சோமரத்ன, ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X