Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
இலங்கையின் 02ஆவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியோரங்களில் காணப்படும் சதுப்புநில தாவரங்கள் அழிந்து வருகின்றன.
350 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இவ்வாவியோரங்களில் காணப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான சதுப்புநில கண்டல் தாவரங்கள் அழிவடைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் கரையோரம் பேணல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கே.கோகுலதீபன் தெரிவித்தார்.
குறித்த சதுப்பு நில தாவரங்கள் அழிவடைவதால் வாவியில் மீனினங்கள் அழிந்து வருகின்றன. இத்தாவரங்களுக்குள்ளேயே அதிகமான மீனினங்கள் சினைப்படுத்தல் செய்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு வந்தன.
இத்தாவரங்கள் மனிதர்களின் மண்ணை மாசுப்படுத்தும் நடவடிக்கைகளினால் பல வகையான மீனினங்கள் அழிவடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனால் இத்தாவரங்கள் அழிவடைவதற்கான காரணங்களை கண்டறியும் மண் ஆய்வுகளை சுவீடன் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
சதுப்பு நில தாவரங்கள் அதிகளவில் அழிவடைந்துள்ள கொக்கடிச்சோலை பகுதியில் குறித்த சதுப்புநில தாவரங்கள் அழிவடைந்த மண் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.
சுவீடன் ஜொதன்பேக் பல்கலைகழக புவியியல் மற்றும் மண்ணியல் விஞ்ஞான பிரிவு மாணவிகளான அஸட்ரிட் ட்லெட்மேன் மற்றும் மஜா ஜொன்சன் ஆகியோர் கிழக்கு பல்கலை கழக விஞ்ஞான பிரிவு மாணவர்களுடன் இணைந்து இந்த ஆய்வு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago