2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம்

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

அரசாங்கத்தின் நூறு நாட்கள் விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட தேசிய நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி, நாவற்குடாவில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றது.

நாடெங்கிலும் இந்த திட்டம் நேற்று காலை நடைபெற்ற நிலையில் நாவற்குடா இசை நடனக்கல்லூரி வீதியின் இரண்டாம் குறுக்கு வீதி,  இதன் கீழ் புனரமைப்பதற்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சின் வீட்டுக்கு வீடு-கிராமத்துக்கு கிராமம் 15.000 கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மாவட்ட திட்டமிடல் உதவி பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நூறு நாட்கள் விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 345 கிராம சேவையாளர்கள் பிரிவில் 358 அபிவிருத்தி திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கான 345 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு 10 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டரை இலட்சம் ரூபா மக்கள் பங்களிப்புடன் இந்த அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X