Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன்
அரசின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் தெரிவுக் கூட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (11) நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் எம்.என்;.எல்.எம். நைறூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலில் இளைஞர் யுவதிகளுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
நிர்வாகத் தெரிவில் தலைவராக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த எஸ். துஸ்யந்தன், செயலாளராக மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஜே. கலாராணி, பொருளாளராக வாகரை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஏ. சத்தியநாதன், உப-தலைவராக மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த எஸ். திவ்வியநாதன், உப செயலாளராக பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த த. கோபிதா, அமைப்பாளராக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த எம். பெரோஸ் ஆகியோர் தெரிவாகினர்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கலை, கலாசாரம், விளையாட்டு, ஊடகம், தேசிய சேவை, வெளிநாட்ட வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் புரி மற்றும் மக்கள் தொடர்பாடல் உட்பட 23 பதவிகளுக்காக செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே. தவராஜா, அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்வரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
3 hours ago
3 hours ago