2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கர்ப்பிணிகளுக்கு போஷாக்கு பொதிகள்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சினால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போஷாக்குப் பொதிகள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் இடம்பெற்றது.

வாகரையில் 16 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவுப் பொதியைப் இதன்போது வழங்கப்பட்டன.

பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். ஐ. எம். மன்சூர் பங்கேற்றார்.

அத்துடன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே .முருகானந்தம், பெண் நோயியல் வைத்திய நிபுணர் வைத்தியர் சரவணன், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டீ. திஸாநாயக்க பொது சுகாதார பரிசோதகர், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர், குடும்பநல உத்தியோகஸ்தர்கள், குடும்ப நல மருத்துவ மாதுக்கள் மற்றும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X