2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'வடமாகாணம் கல்வியில் சாதனை படைக்கின்றது'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

வடமாகாணம் கல்வியில் பல சாதனைகளை  படைத்துக்கொண்டிருக்கின்றது. அந்த நிலைமை கிழக்கு மாகாணத்திலும் வலுப்பெறவேண்டும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, குருக்கள்மடம் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் சமூக மேம்பாட்டு மையம் நடத்திய விருதளிப்பு விழா நேற்று சனிக்கிழமை (11) மட். குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு  உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு  கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய  அவர்,

'கல்விப்பணி செய்யப் பிறந்தவர்கள் பாக்கியவான்கள். ஆனால், அப்பணியை  செய்பவர்கள் அர்ப்பணிப்புடன் செய்யவேண்டும்.  

எமது பிரதேசத்திலுள்ள பெற்றோர்,  தங்களது பிள்ளைகளின் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் காட்டும் அக்கறை கல்விப் பொதுத்தர சாதாரணதரப் பரீட்சையிலும் உயர்தரப் பரீட்சையிலும், காட்டுவதில்லை. இதில் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் மாணவர்கள், வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கற்கவேண்டும். இவற்றை விடவும் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பல பாடவிதானங்களை கற்று முன்னேறலாம்.
2014ஆம் ஆண்டு நடைபெற்றுமுடிந்த கல்விப் பொதுத்தர தாராரண பரீட்சையில்  48 சதவீதமான மாணவர்கள் இலங்கையில் கணித பாடத்தில் சித்திபெறத் தவறியிருக்கின்றார்கள்.  இதுதான் இன்றைய கல்வியின் நிலைமை. இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களில் மாணவர்களை சித்தியடைய வைக்கவேண்டும் என்ற துரித நடவடிக்கையை மத்திய அரசிலிருக்கின்ற கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.  

இவை அனைத்துக்கும்  மேலாக மாணவர்கள் கற்பதற்குரிய உவப்பான சூழலை உருவாக்க வேண்டியது  அனைவரினதும் கடமையாகும்' என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X