Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறை படை முகாமுக்கருகிலிருந்து சனிக்கிழமை மதியம் மோட்டார் ஷெல் ஒன்று மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி படை முகாமுக்கு அருகிலுள்ள சித்தி விநாயகர் வித்தியாலய விளையாட்டுத் திடலைச் சூழவுள்ள முட்கம்பி வேலிப் பற்றைக்குள்ளேயே இந்த மோட்டார் ஷெல் காணப்பட்டுள்ளது.
மோட்டார் ஷெல் காணப்படுவதாக தங்களுக்கு கிடைத்த தகவலின்படி உடனடியாக ஸ்தலத்துக்குச் சென்று மோட்டார் குண்டை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.
குண்டு செயலிழக்கச் செய்யும் படை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இந்த மோட்டார் ஷெல் மீட்கப்பட்டது.
குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் மேற்படி மோட்டார் ஷெல்லை மீட்டு, பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வதற்காக அங்கிருந்து கும்புறுமூலை படை முகாமுக்கு எடுத்துச் சென்றனர்.
இது விடயமாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .