2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திருப்பழுகாமம் விபுலாநந்த வித்தியாலயத்தின் 137ஆவது ஆண்டு நிறைவு விழா

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு, திருப்பழுகாமம் விபுலாநந்த வித்தியாலயத்தின் 137ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழiமை (25) கொண்டாடப்பட்டது.

வித்தியாலய மாணவர்கள், பதவிநிலை உத்தியோகஸ்தர்கள், கலைஞர்கள், சமய பெரியார்கள் போன்ற வேடம் தரித்தவண்ணம்  திருப்பழுகாமம் கிராமத்தைச் சுற்றி பவனி வந்தனர்.
 
பின்னர், வித்தியாலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது இப்பாடசாலைக்குப் பெருமை சேர்ந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சியும் நடைபெற்றது.
 
மேலும், இவ்வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்ஸ்வதி சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு திரை நீக்கம் செய்யப்பட்டதுடன், கல்வி அமைச்சின் 5.6 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டு மாடிக் கட்டடமும் இதன்போது திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வித்தியாலய அதிபர், எஸ்.தருமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிறின்ஸ் காசிநாதர், கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள், மதத்  தலைவர்கள், மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .