Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஆளாக்கிய பெற்றோரை வீட்டை விட்டு விரட்டுவதும் சீதனம் பெறுவதும் சமூகத்தில் காணப்படும் மாபெரும் அநீதிகளாகும் என்று மேர்சி லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் அஷ்ஷேய்ஹ் முஹம்மத் முனாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் மீராகேணிக் கிராமத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 20 வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு, அங்கு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'சமூகத்தில் தலை விரித்தாடும் சீதனக் கொடுமை மற்றும் பெற்றோரை அநாதைகளாக விட்டு விடுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் சமூகத்தை தலைமை தாங்குகின்ற பெரியோர்கள், மார்க்க அறிஞர்கள், சமூக சேவை நிறுவனங்கள் என்பவை அக்கறை கொண்டு நல்வழி காட்டவேண்டும்.
சீதனமும் பெற்றோரை ஒதுக்குதலும் இஸ்லாமிய சமூக அமைப்பில் இல்லாத ஊடுருவிய கலாசாரப் பழக்கவழக்கங்களாகும். ஆயினும், இவற்றை மாற்றி அமைக்காமல் தொடர்ந்து முன்கொண்டு செல்ல வழிவிட்டால், ஓர் அநாகரிகமான சமூகமாக நாம் கருதப்படுவோம்.
எத்தனை ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுத்தாலும் சீதனப் பிரச்சினை ஒருபோதும் தீரப் போவதில்லை. எத்தனையோ இளம் பெண்களின் வாழ்வு சீதனப் பிரச்சினையால் சீரழிந்துகொண்டிருக்கின்றது. எத்தனையோ பெற்றோர் தமது வீடுகளை மகள்களுக்கு சீதனமாகக் கொடுத்துவிட்டு, வீட்டுத் தாழ்வாரங்களில் குந்திக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சில பெற்றோர் அநாதைகளாகவும் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டிருக்கின்ற நிலையையும் காண்கின்றோம்.
அப்படிப்பட்ட கொடுஞ்செயல்கள் இனிமேலும் நடக்கக்கூடாது என்ற ஆவேசத்தினால், நான் எனது அனுபவப்பட்ட கருத்துக்களை இங்கே முன்வைக்கின்றேன்.
நாம் கட்டிக்கொடுத்த ஒரு வீட்டை கண்காணிப்பதற்காக சென்றபொழுது, அந்தப் பெரிய வீடு மகளுக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள்ளே மகளும் மருமகனும் சௌகரியமாக இருக்க, அந்தப் பெற்றோரும் அவர்களின் இன்னுமொரு வளர்ந்த பெண் பிள்ளையும் கால் நீட்டித் தூங்க இடமின்றி வீட்டுத்; தாழ்வாரத்தில் குந்திக்கொண்டிருப்பதை பார்த்து வேதனைப்பட்டோம்.
இத்தகைய செயல்கள் மனிதர்களது சாபத்துக்கும்; இறைவனின் சாபத்துக்கும் உரியவை. எனவே, இத்தகைய மீள முடியாத பாவச் செயல்களிலிருந்து எங்களது சமூகத்தை பாதுகாக்கவேண்டும். எமது வீட்டுத்திட்டத்தில் இத்தகைய விடயங்களை மிகக் கவனமாகப் பரிசீலித்து மிகப் பொருத்தமானவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்கின்றோம்' என்றார.;
கட்டார் நாட்டு மன்னர் கலீபா பின் அலி அல் ஹித்மி இந்த வீடமைப்புக்கு நிதியளித்திருந்ததுடன், மேர்சி லங்கா நிறுவனம் இந்தத் திட்டத்தை அமுலாக்கியிருந்தது. அத்துடன், ஏறாவூர் ஸக்காத் பவுண்டேஷனால் இந்த வீடமைப்புக்கான காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
'அல் ஹித்மி கிராமம்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த வீட்டுத்திட்டத் திறப்பு விழாவில் கட்டார் நாட்டு மன்னரின் பிரதிநிதியாக பக்ர் ரஷாஸ், மேர்சி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் நாஸர் ஹஸன், அதன் திட்ட முகாமையாளர் அஷ்ஷேய்ஹ் முஹம்மத் முனாஸ் ஆகியோரும் ஏறாவூர் ஸக்காத் நிதியம் உட்பட இன்னும் பல பிரமுகர்களும் பயனாளிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
3 hours ago