Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
சர்வதேச மத்தியஸ்தத்துடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குரிய தீர்வை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் காலாண்டு இதழான தென்றல் சஞ்சிகையின் ஏற்பாட்டில் பட்டிப்பளை பிரதேசத்தில் ஐந்தாம் தர மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட புலமைப்பரிசில் முன்னோடிப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தற்போது இந்த நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 08ஆம் திகதிக்கு முன்னர் எமது மக்களை அடிமைகளாக வைத்திருந்த ஆட்சி மாறியுள்ளது. ஜனநாயக ஆட்சி இப்போது மலர்ந்துள்ளது.
இதன் ஊடாக தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களின்; அபிலாஷைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை நோக்கி இந்த நாடு சென்றுகொண்டிருக்கின்றது.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசாங்கத்துடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
இந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டு வந்தார்கள். அதற்கு எதிராக தமிழர்கள் போராடினார்கள். இதன்போது பண்டா -செல்வா ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள்; செய்யப்பட்டு, அவை கிழித்து எறியப்பட்ட வரலாறுகள் உள்ளன.
இதன் காரணமாகவே சர்வதேச மத்தியஸ்தத்துடன் காத்திரமான பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும். அதன் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும்.
மேலும், கடந்த காலத்தில் இப்பகுதிகளில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட தாக்கம் இன்று இலங்கையின் உயர் பதவி நிலைகளில் தமிழர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிலைமையை நாங்கள் மாற்றவேண்டுமானால், மாணவர்கள் தங்களை கல்வியில் முழுமையாக அர்ப்பணிக்கவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
13 Jul 2025
13 Jul 2025
13 Jul 2025