2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கேரள மற்றும் உள்ளூர் கஞ்சாவுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரீப் புறொக்டர் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து கேரளக் கஞ்சா வைத்திருந்த நிசான் கனி றாசிக் என்ற 37 வயதான குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 15,000 ரூபாய் பெறுமதியான கேரளக் கஞ்சா இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சோதனையிட்ட போதைவஸ்துத் தடுப்பு புலனாய்வுப் பொலிஸார், மேற்படி கஞ்சாவை கைப்பற்றியதுடன் அதனை வைத்திருந்த நபரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வாழைச்சேனை வை.எம்.எம்.ஏ. வீதியைச் சேர்ந்த நூர்முஹம்மது முஹம்மது சாதிக்கீன் என்ற 57 வயதான குடும்பஸ்தரிடமிருந்து 20,000 ரூபாய் பெறுமதியான இலங்கை கஞ்சா, ஞாயிற்றுக்கிழமை (26) கைப்பற்றப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .