2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை எமது அரசியல் போராட்டம் தொடரும்: தண்டாயுதபாணி

Sudharshini   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

– வடிவேல் சக்திவேல்  

கிழக்கில் நாம் அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்ததன் மூலம் எமது கட்சி எடுத்துக் கொண்டிருக்கின்ற அரசியல் தீர்வை நோக்கிய பயணம் நின்றுவிடப் போவதில்லை. இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பிரச்சனைகள் எதுவும் அடிப்படையாக இன்னும் தீர்க்கப்பட்டவில்லை. ஆனால், எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மட்.திருப்பழுகாமம் விபுலாநந்த வித்தியாலயத்தின் 137ஆவது ஆண்டு நிறைவு  விழா சனிக்கிழiமை (25) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்; இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

தற்போதும் கூட தமது சொந்த நிலங்களுக்கு மீண்டும் செல்லமுடியாதவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்றார்கள். அவலப்பட்டுப் போயுள்ள எமது மக்களுக்குச் சேவை செய்வதற்காக கிழக்கு மாகாணத்தில் தற்போது எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனூடாக எமது மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

கிழக்கில் அமைச்சுப் பெறுப்பக்களை ஏற்றது எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பாக ஏற்றுக் கொண்டிருக்கின்றோமே தவிர, எமது அரசியல் பாதையில் எதுவித மாற்றமும் ஏற்பட்டு விடமுடியாது.

மிக நீண்டகாலமாக எமது மக்கள் பல துன்பங்களைச் சந்தித்து சிரமப்பட்டுப் போயுள்ளார்கள். ஆனால், தற்போது கிழக்கு மாகாணத்திலே சில வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன அவற்றை தற்போது உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த கால அழிவுகளில் எமது மக்கள் மத்தியில் மிஞ்சியது கவ்வி மட்டுமே! எனவே, அக்கல்வியை எமது பிள்ளைகளுக்கு உரிய முறையில் ஊட்ட வேண்டும். இவற்றில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாடசாலை முறைமையை மேலோங்கச் செய்ய வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் பிரத்தியோக வகுப்புக்களுக்கு பிள்ளைகளை பெற்றோர் அதிகம் உட்படுத்துகின்றார்கள். ஆனால், பிரத்தியோக கல்வி நிறுவனங்கள் பாடசாலைகளுக்கு ஈடாகாது. பிள்ளை பாடசாலைக்குப் போகின்றதா என்பதை விட, பிரத்தியோக வகுப்புக்குச் சென்றுள்ளதா என்பதில் கவனம் செலுத்துவதுதான் பெற்றோர் மத்தியில் தற்போது பெருகிவிட்டது. அந்த அளவிற்கு பாடசாலை முறைமையை கௌரவிக்காதவர்களாக பெற்றோர் மாறிவிட்டார்கள்.

பாடசாலைகள் சமுகத்தின் சொத்து அப்பாடசாலையின் வளத்தினை முழுமையாகப் பெற்று எமது பிள்ளைகளுக்கு வளங்க வேண்டும் என்பதில் எமது சமுகம் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

சில இடங்களில் கல்வி வளங்கள் விரையமாக்கப்படுகின்றன. கல்வி நிருவாகத்திலே அவை சீராக்கப்படல் வேண்டும். பாடசாலையிலே உள்ள முதன்மையான வளமாகக் காணப்படுகின்ற ஆசியர்களை பாடசாலைகளுக்கு சரியான முறையில் பங்கீடு செய்தல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .