2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கற்பித்தல் உபகரண தயாரிப்பு கல்விக் கண்காட்சி

Thipaan   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் நடன சங்கீத ஆசியர் பயிலுனர்களது கற்பித்தல் உபகரண தயாரிப்பு கல்விக் கண்காட்சி இன்று திங்கட்கிழமை (27) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் கலைப்பிரிவு பொறுப்பு விரிவுரையாளர் திருமதி பி.புஸ்பலதா அன்ரனியின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த கண்காட்சியை கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

இந்தக்கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் கல்லூரி உப பீடாதிபதிகளான ரி.யுவனேஸ்வரி, எஸ்.ஜெயகுமார், எம்.சி.ஜுனைட் உட்பட கல்லூரி விரிவுரையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்காட்சியில் நடன சங்கீத ஆசியர் பயிலுனர்களது கற்பித்தல் தொடர்பான உபகரணங்கள் இது தொடர்பான ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சி நாளை (28) மாலை நிறைவு பெறவுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .