2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மிளகாய் தோட்டத்துக்குள் கஞ்சா செடி

Sudharshini   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகளை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (26) கைப்பற்றியுள்ளனர்.  

தும்பங்கேணிக் கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது மிளகாய் தோட்டத்துக்குள்  மறைமுகமான  முறையில் கஞ்சாச்செடிகளை வளர்த்து வந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அவ்விடத்தை சுற்றி வளைத்த பொலிஸார், கஞ்சாச்செடிகளை கைப்பற்றியதுடன் தோட்ட உரிமையாளரையும் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வெல்லவெளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .