Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தல் மூலம் எமது நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் மக்கள் வழிசமைக்க வேண்டும். அதன் ஊடாகவே நாங்கள் எமது இனததுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்; தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துக்;குட்பட்ட எருவில் கிராமத்தின் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல், எருவில் கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்றது.
எருவில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கனகரெத்தினம்; தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பன்நெடுங்காலமாக எமது இனம் பேரினவாத சக்திகளால் தொடர்சியாக நசிபட்டுக் கொண்டிருக்கின்றோம், இந்த பேரினவாதிகளின் நலனுக்காக அவர்களை நாங்கள் விடக் கூடாது.
தமிழ் மக்களாகிய நாங்கள் ஏனைய இனங்கள் போன்று சமமாக வாழவேண்டும். அதுமாத்திரமின்றி ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். எமது வாக்குப் பலத்தின் மூலம் நாங்கள் இந்த நாட்டில் எமது இனம் சார்ந்த சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்.
கடந்த வடமாகாண சபைத்தேர்தல் மற்றும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மக்களின் வாக்களிக்கும் ஆர்வம் கூடியுள்ளதனை நாங்கள் அவதானிக்கின்றோம்.
இதனூடாக, நாங்கள் இந்த நாட்டில் எதிர்காலத்தில் பெரியமாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
மக்களது கிராமம் சார்ந்த குறைகளை முன்வைக்கும் போது பல குறைபாடுகளை முன்வைக்கின்றார்கள்.
அவை அனைத்தையும் மிக இலகுவாக விரைவாக செய்து விடமுடியாது. அவற்றை படிப்படியாகவே செய்து முடிக்க வேண்டும் மாறாக உடனே செய்து முடிக்கமுடியாது.
இருந்தாலும் இந்தக் கிராம மக்களின் குறைபாடு ஒன்றை நான் அவதானித்தேன். பொது விளையாட்டு மைதானம் ஒன்று இந்த கிராமத்துக்கு இன்மையால், இளைஞர்கள் சிரமப்படுகின்றனர்.
இதனை கருத்திலெடுத்து நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என இதன்போது அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
6 hours ago
6 hours ago
6 hours ago