2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மருந்து கலவையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு

Thipaan   / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

அகில இலங்கை ரீதியில்  மருந்து கலவையாளர்களாக போட்டி பரீட்சை மூலம் தெரிவான 35 பேருக்கு பயிற்சிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு  மட்டக்களப்பு பிராந்திய பயிற்சி நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (27) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ், மருந்து கலவையாளர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தின் ஊடாகவே இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வு, கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார பணிமணை பொறுப்பதிகாரி வைத்தியர் ஈ .ஸ்ரீநாத் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே .கருணாகரன்  மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே .முருகானந்தன் ,பிராந்திய சுகாதார பணிமணை பணிப்பாளர் வைத்தியர் எஸ் .சதுர்முகம், மாகாண மருந்து கலவையாளரும் இணைப்பாளருமான என் .நடராஜா மற்றும் பிராந்திய சுகாதார அலுவலக வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.         

இன்று ஆரம்பமான பயிற்சி நெறியானது ஒன்பது மாதங்களுக்கு வழங்கப்பட்டு, பயிற்சின் பின்,  கலவையாளர்;களுக்கு நிலவும் வெற்றிடங்களுக்கேற்ப சுகாதார அமைச்சினால் இவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .