2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூரில் சர்வதேச தரத்திலான ஆடைத்தொழிற்சாலை

Gavitha   / 2015 ஏப்ரல் 27 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் சர்வதேச தரத்திலான ஆடைத் தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் செவ்வாய்க்கிழமை (28) இதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு திங்கட்கிழமை (27) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச தரத்திலான ஆடைத்தொழிற்சாலையொன்றை அமைப்பதனால் இப்பிராந்தியத்திலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க முடியும்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் ஆடை உற்பத்தி நிறுவனமான ஹமீடியாஸ் மற்றும் கிழக்கிலங்கை பொருளாதார அபிவிருத்திப் பேரவை (Federation of Eastern Economical Development) ஆகியவற்றுக்கிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஹமீடியாஸ் ஆரம்பிக்கவுள்ள இந்த ஆடைத் தொழிற்சாலையின் பூர்வாங்க வேலைகள் செவ்வாய்க்கிழமை (28)  ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் ஹமீடியாஸ் நிறுவன அதிகாரிளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறிப்பிட்ட இந்த ஆடைத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் இப்பிரதேசத்திலுள்ள மேலும் பல நூற்றுக்கணக்கானோர்  நிரந்தர வாழ்வாதாரத்துக்கான வேலைவாய்ப்பையும் பெறுவர் என்றும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .