2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  முறக்கட்டாஞ்சேனை சேர்மன் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் எரிகாயங்களுடன் உயிரிழந்த நிலையில், குடும்பத்தாரால்  மீட்கப்பட்டதாக திங்கட்கிழமை (27) மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடு தீப்பிடித்து எரிகின்றது என்று எண்ணிய அயலவர்கள், வீட்டுக்கதவை உடைத்து உட்சென்று பார்த்த போது, குறித்த பெண் எரிகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவர் சாமித்தம்பி கமலேஸ்வரி (வயது 36) என்றும் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் அடையாளங்காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர், தொழில் நிமிர்த்தம் சவுதியில் நான்கு வருடங்கள் கடமையாற்றிவிட்டு கடந்த வருடம் 10.08.2014 நாடு திரும்பியுள்ளார். விடுமுறைக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் செவ்வாய்க்கிழமை (28) சவுதிக்கு செல்வதற்கு திங்கட்கிழமை (27) அவருடைய பிறப்பிடமான கல்முனையில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதன்பின்னரே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தனது மனைவிக்கு எவ்வாறு இந்த சம்பவம் நடைபெற்றது என்பது தொடர்பாக தெரியவில்லை என்று கணவர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஷீர், விசாரணைகளின் பின்னர் சடலத்தை பிரதே பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு ஒப்படைக்கமாறு ஏறாவூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு ஏழு வயது மற்றும் நான்கு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .