2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியரை தாக்கிய மூவர் கைது

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹ[ஸைன்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைதுறைச்சேனை ஷாதுலியா முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை தாக்கிய மூவரை, செவ்வாய்க்கிழமை (28) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
குறித்த ஆசிரியரிடம் கல்வி கற்கும் மாணவனின் தாய் உட்பட் மூவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே இவர்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனை ஆசிரியர் எச்சரித்தமையினாலேயே மாணவனின் தாய் மற்றும் உறவினர்களால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .