2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நெல் வயல்களில் 'இராணுவப் புழு' தாக்கம் விவசாயிகளுக்கு எச்சரிக்கை

Kogilavani   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்  

மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் கிரான் விவசாய போதனாசிரியர் பிரிவுகளுக்குட்பட்ட நெல் வயல்களில் 'இராணுவப் புழுத்' (Army Worms) தாக்கம் காணப்படுவதாக மட்டக்களப்பு விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெற்செய்கை பண்ணப்படும் பட்டியடிவெளி, சேம்பையடி, தவணை, காட்டுக்கட்டு போன்ற கண்டங்களிலுள்ள  ஒருசில வயல்களில் கடந்த சில நாட்களாக இந்த புழுவின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த இராணுவப் புழு பொதுவாக 5-6 சென்ரி மீற்றர் நீளமான கறுப்பு அல்லது சாம்பல் நிறமானது. அத்துடன் அதன் முதுகுப் பக்கம் இளமஞ்சல் நிற கோடுகளுடனும் காணப்படும்.

பொதுவாக இவை இரவு நேரங்களில் வயலில் தாக்கம் ஏற்படுத்தும். இதனால் நெல்வயல்களில் நீர் மட்டத்துக்கு மேலுள்ள தாவரப் பகுதிகளை தாக்குவதனால் அங்கு  கால்நடைகள் மேய்ந்ததுபோல் தோற்றமளிப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களின் களவிஜயம், தெளிவூட்டல் பயிற்சி போன்ற செயற்பாடுகள் மூலம் பெரும்பாலும் இந்தப் புழுவின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் இது தொடர்பான கட்டுப்பாடு மற்றும் ஏனைய விபரங்களை பெறவேண்டுமாயின் அப்பகுதி விவசாய போதனாசிரியர்களான ரீ.ரவிவர்மன் (தொலைபேசி 077-2734411) எம்.கலைமோகன் (தொலைபேசி 076-7222412) ஆகியோரை தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் என மட்டக்களப்பு விவசாயதிணைக்களம் விவசாயிகளை கேட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .