2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கார் - உழவு இயந்திரம் விபத்து

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் கார் மற்றும் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (28) இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் இதில் எவருக்கும் உயிராபத்துக்களோ காயங்களோ ஏற்படவில்லை எனவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது ஆறுமுகத்தான் குடியிருப்பு உள் வீதியிலிருந்து திடீரென பிரதான நெடுஞ்சாலைக்;குள் பிரவேசித்த உழவு இயந்திரம் மோதியுள்ளது.

இதில் கார் தலைகீழாக கவிழ்ந்து நொறுங்கியதுடன் உழவு இயந்திரத்தில் இழுவைப் பெட்டியும் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .