Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, முனைக்காடு சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (28) வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபையின் நான்கு மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தினை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி வைபவரீதியாக திறந்து வைத்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தரம் 01 முதல் தரம் 05 வரை வகுப்புகள் உள்ளன.
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான பல்நோக்கு மண்டபத்திலும் தற்காலிக கொட்டில்களிலும், மரநிழல்களிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இப்பாடசாலை கட்டடம் இல்லாத சூழலிலும் முதன்முதலாக கடந்த வருடம் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பரீட்சையில் 27 மாணவர்கள் தோற்றி, அந்த 27 மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்ததுடன், அதில் 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்திபெற்று சாதனை படைத்திருந்தனர்.
வித்தியாலய அதிபர் க.கிருபைராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் ஞா.சிறிநேசன், எஸ்.மகேந்திரகுமார், கே.ஹரிகரராஜ், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், இப்பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள், கிராம அமைப்புக்களின் அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025