Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வருடா வருடம் நடாத்தப்படும் தொழிலாளர் கௌரவிப்பு நிகழ்வு இம்முறை மட்டக்களப்பு முறக்கெட்டாஞ்சேனை பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
புதிய சட்டதிருத்தங்களில் தமிழர்களின் உரிமையை உறுதி செய்வோம் என்ற தொனிப்பொருளில் இவ்வருடமும் உலக தொழிலாளர் தின நிகழ்வு மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை ஞானஒளி விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 4.30 மணிக்கு எமது கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கான வாகன பேரணி மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைமை காரியாலயத்தில் இருந்து மே முதலாம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, டிரக்டர், வான், பஸ் உள்ளிட்ட வாகனங்களின் பேரணியும் ஊர்வலமும் நடைபெறவுள்ளதாக பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025