2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆடைத்தொழிற்சாலைக்குரிய பயிற்சி நிலையம் திறப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் சர்வதேச தரத்திலான ஆடைத் தொழிற்சாலைக்குரிய பயிற்சி நிலையம் செவ்வாய்க்கிழமை(28) மாலை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

ஆடை உற்பத்தி நிறுவனமான ஹமீடியாஸ் மற்றும் கிழக்கிலங்கைப் பொருளாதார அபிவிருத்திப் பேரவை ஆகியவை கூட்டிணைந்து இந்த ஆடைத்தொழிற்சாலையை இயக்கவுள்ளன.

இப்பிரதேசத்தில் சர்வதேச தரத்திலான ஆடைத் தொழிற்சாலையொன்றை நிறுவுவதன் மூலம் இப்பிராந்தியத்திலுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் ஜுன் மாத இறுதியில் பிரமாண்டமான சர்வதேசத் தரத்திலான ஆடைத் தொழிற்சாலையாக பல நூற்றுக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் ஹமீடியாஸ் நிறுவன அதிகாரிகள், மாகாண அமைச்சர்களான மன்சூர், துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.அப்துல் அஸீஸ், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, ஏறாவூர் நகரபிதா எம்.ஐ.எம்.தஸ்லீம் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .