Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு பூநொச்சிமுனையில் சுமார் 9.5மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முகைதீன் ஜும் ஆ பள்ளிவாயலின் புதிய கட்டடம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேனசன் நிறுவனத்தின் உதவியுடன் சவூதி அரேபிய நாட்டு தனவந்தரின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் காத்தான்குடி காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, மற்றும் ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேனசன் நிறுவனத்தின் செயலாளர் மௌலவி ஏ.எல்.மும்தாஸ் மதனீ, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் உட்பட பள்ளிவாயலின் நிர்வாகிகள் உலமாக்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது பள்ளிவாயலை நிர்மானிக்க நிதியுதவி வழங்கிய சவூதி அரேபிய நாட்டு தனவந்தருக்கு பள்ளிவாயல் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025