Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சமாதானத்துக்கான இலங்கை சமயங்களின் பேரவை மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபட்டு வருகின்றது என மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் தெரிவித்தார்.
சமாதானத்துக்கான இலங்கை சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வருடாந்த பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் ஆயர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய அருட்கலாநிதி பொன்னையா ஜோசப், மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சமூக சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சகோரத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த இந்த அமைப்பு பாடுபட்டு வருகின்றது.
இந்த பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மத தலைவர் தலைவராக இருப்பார். அந்த வகையில் இவ்வாண்டு இந்து மதத்தைச் சேர்ந்த சுவாமி சதுர்ப்பு ஜானந்த ஜீ அவர்கள் தலைவராக இருப்பார்.
வேறுபாடுகளை மறந்து சமூக நல்லிணக்கத்தை உருவாக்கவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டும். ஒற்றுமைப்பட்டு மதங்களினூடாக சிறந்த சமூக கலாசாரத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என ஆயர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
இதன் போது சமாதானத்துக்கான இலங்கை சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்வாண்டுக்கான புதிய தலைவராக சுவாமி சதுர்ப்பு ஜானந்த ஜீ, மற்றும் உப தலைவர்களாக மட்டு அம்பாறை மறை மவாட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப், காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் செயலாளர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி பொதுச் செயலாளராக அல்போன்ஸ் மேரி, பொருளாளராக எம்.எஸ்.எம்.அகமட் சாலி, உதவி செயலாளராக கே.சக்திதாஸ் உட்பட இந்து கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் நிருவாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதுடன், இளைஞர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்பிலிருந்தும் தலா மூன்று உறுப்பினர்கள் இதன்போது நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். இதன் உள்ளக கணக்காய்வாளராக என்.ஆர்.பத்மநாதன் பாபுவும் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தக் கூட்டத்தின் போது, கடந்த கால செயற்பாட்டறிக்கை வாசிக்கப்பட்டதுடன் கணக்கறிக்கையும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025