Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) போட்டியிடும்;. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மாத்திரமல்லாது மலையகம் வரை ஈரோஸ் இயக்கம் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் ஈழவர் ஜனநாயக முன்னனியின் அலுவலகம் ஒன்றினை இன்று புதன்கிழமை (29) வைபவ ரீதியாக திறந்து வைத்து கலந்து கொண்ட மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் உரையாற்றுகையில்,
எதிர்வரும் எந்த தேர்தல் என்றாலும் ஈரோஸ் பங்கு கொள்ளும். இம் மக்களுக்கு நல்லதொரு தலைமைத்துவத்தினையும் நல்ல சமூகத்தினையும் உருவாக்க வேண்டும்.
மக்களுக்குரிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். விதவைகளினதும் ஊனமுற்றவர்களின் வாழ்க்கைத் தரத்தினையும் மலர வைக்க வேண்டும். ஏழை மக்கனின் வயிறு நிரம்பி அவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும்.
இவை அத்தனையும் நிறைவேற்ற வேண்டும் என்றால் ஈரோஸ் கட்;சிக்கு அரசியல் அங்கிகாரம் தேவை.
இந்த அரசியல் அங்கிகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காகவே ஈரோஸ் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
கடந்த 1988இல் நடைபெற்ற தேர்தலில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் வசம் வைத்திருந்த ஈரோஸ், இம்முறை; குறைந்தது 5 நாடளுமன்ற உறுப்பினர்களையாவது கட்டாயமாக பெற்றுக் கொள்ள நாம் முயற்சிப்போம்.
ஈரோஸ் எந்த கால கட்டத்திலும் எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் இணைந்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடும்.
நாம் தற்போதைய நிலையில் அரசாங்கத்தை ஆதரித்தால்தான் பின்தங்கி காணப்படும் எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியும்.
இன்று எமது சகோதர இனக்கட்சிகளை பாருங்கள். அவர்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதால் இன்று அபிவிருத்தியின் உச்ச கட்டத்துக்கு சென்றுள்ளனர்.
எனவே நாம் பட்ட துன்பம் போதும். எமது வாழ்க்கைக்கு ஒரு நல்லதொரு விடிவு காலம் வேண்டும். எனவே, நாம் எல்லோரும் சேர்ந்து ஓர் அரசியல் அந்தஸ்த்தை ஈழவர் ஜனநாயக முன்னனி (ஈரோஸ்) க்கு வழங்க முன்வாருங்கள் என்றார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025