Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
இலத்திரனியல் கழிவுகளின் அபாயகர தன்மையும் அதிலிருந்து விடுபடக்கூடிய வழிகளும் எனும் தலைப்பிலான செயலமர்வு புதன்கிழமை (29) நிந்தவூரில் நடைபெற்றது.
நிந்தவூர் 17ஆம் பிரிவு திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எ.எல்.எம். ஜெமீல் தலைமையில் திவிநெகும அபிவிருத்தி அலுவலகத்தில் நடைபெற்ற செயலமர்வில், நிந்தவூர் அல் அஷ்ரக் மகா வித்தியாலய மாணவி செல்வி எ.எச். இன்பாசா ஹமீட் வளவாளராகக் கலந்து கொண்டு வீடுகளில் சேரும் இலத்திரனியல் கழிவுகளின் அபாயகரத் தன்மையும் அதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளிலிருந்து எவ்வாறு விலகுவது, எவ்வகையான வழிவகைகளை கையாள்வது என்பது தொடர்பில் விளக்கமளித்தார்.
இச்செயலமர்வில் நிந்தவூர் 17ஆம் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
6 hours ago