2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Kanagaraj   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி கரையோர மரங்களுக்கிடையிலிருந்து செவ்வாயன்று இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு ஆண்டியார் வீதியைச் சேர்ந்த செல்வம் தினேஷ்காந்தன் (வயது 20) என்ற இளைஞர் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். 

காணாமல் போன இளைஞனைத் தொடர்ந்து தேடி வந்த நிலையில் நேற்றையதினம் சவுக்கடிக் காட்டில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று பெற்றோர் தமது காணாமல் போன மகனுடைய சடலத்தை அடையாளம் காட்டினர். 

தரம் 10 வரை கல்வி கற்று வந்த இவர் பெற்றோருக்கு கட்டுப்படாமல் பள்ளிப் படிப்பையும் இடைநிறுத்திருந்தார் என்றும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தொன்றின்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் பெற்றோர் தெரிவித்தனர்.
 
பிரேதச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் மற்றும் வைத்தியர் கே. சுகமார் ஆகியோர் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தனர்.

மரண விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .