2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

37 வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் சான்றிதழ்

Kogilavani   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'சிப்தொற' உயர் கல்விக்கான புலமைப் பரிசில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை(29) இடம்பெற்றது.

வவுணதீவு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரம் பயிலும் 37 மாணவர்கள் 'சிப்தொற' புலமைப் பரிசில் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

சமூர்த்தி நன்மை பெறும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இந்த மாணவர்களுக்கு  மாதாந்தம் தலா ஆயிரம் ரூபாய் விகிதம் இரண்டு வருடங்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, வாழ்வின் எழுச்சி பிரதேச முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.சத்தியசீலன் உள்ளிட்டோரும் மாணவர்களும் அவர் தம் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

இரண்டு வருடங்களுக்கு மாதாந்தம் 1000 ரூபாய் படி புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .