Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
'தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் வாழ்வதற்கு ஊடகவியலாளர் சிவராம் குரல் கொடுத்து வந்ததார்' என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் எழுத்தாளருமான எஸ்.எல்.எம்.ஹனிபா தெரிவித்தார்.
ஊடகவியலாளர் தராகி தர்மரட்ணம் சிவராமின் பத்தாவது ஆண்டு நினைவு தின வைபவம் புதன்கிழமை(29) மாலை மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'ஊடகவியலாளர் சிவராம் ஊடகவியலாளர்களுக்கே முகவரியை ஏற்படுத்திக் கொடுத்தவர். பத்து வருடங்களுக்குப் பிறகு ஊடகவியலாளர் சிவராமை நினைவு கூறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்துள்ளார்.
அதற்காக நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு நன்றி கூறுகின்றோம். சிவராம் மட்டக்களப்பில் வாசகர் வட்டமொன்றை உருவாக்கினார். அதில் நானும் இருந்தேன்.
சிவராமின் பாணியில் நூறுவீதமாவது நமக்கு பயணிக்க முடியாவிட்டாலும் ஐம்பது வீதமாவது அவரின் ஊடகவியலை பின்பற்ற வேண்டும்.
அதிகம் வாசிப்பவராக சிவராம் இருந்தார். தமிழ் முஸ்லிம் கலவரம் நிறைந்த அந்தக்காலத்திலும் ஒட்டமாவடியிலுள்ள எனது காணியில் வந்து சிவராம் உறங்கிச் சென்ற வரலாறுகள் உண்டு.
இன்று ஊடகவியலாளாகள் அரசியல்வாதியின் செய்தியைத்தான் அதிகம் எழுதுகின்றனர். அவர்களுக்கு பின்னாள் அலைந்து திரிந்து அவர்களின் புகழ் பாடுகின்றனர்.
ஆனால், சிவராம் அவ்வாறில்லை. சமூகத்தின் பிரச்சினைகளை உலகுக்கு முன்வைத்தார்' என்றார்.
இங்குரையாற்றிய கிழக்கு பலக்லைக்கழகத்தின் தொடர்பாடல் கற்கைகள் துறைத்தலைவர் கலாநிதி சி.ரகுராம்
'ஊடகவியலாளர் சிவராம் ஒரு சிறந்த இராணுவ ஆய்வாளராக திகழ்ந்தார். தனக்கு சரி என பட்டதை சிறப்பாக எழுதினார்.
போராட்டத்தில் சிவராம் இணையாவிட்டாலும் போராட்டத்துக்கு வெளியில் சிவராம் எழுதிய எழுத்துக்களை மறந்து விடமுடியாது.
அவர் எழுதிய எழுத்துக்கள் தமிழ் மக்களுக்குள்ள பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு சென்றது. அவைகளை நியாயமாக நேர்மையாக துணிச்சலாக எழுதியிருந்தார்.
தெற்கிலே உள்ள சிங்கள மக்களுக்கு, சிங்கள புத்தி ஜீவிகளுக்கு தமிழர் தரப்பு நியாயத்தை தனது எழுத்தின் மூலம் கொண்டுசெல்ல முடியும் என சிவராம் நம்பியிருந்தார்.
தனக்கு நியாம் எனத்தெரிந்ததை அவர் எழுதினார். அதனால் சிவராம் தமிழ் தேசியத்தினால் மதிக்கப்படுகின்றார்.
ஒரு சிறந்த துனிச்சலான ஊடகவியலாளராக சிவராம் திகழ்ந்தார். ஒரு ஊடகவியலாளர் ஒரு முழு மனிதனாக திகழ வேண்டும் என சிவராம் கூறியிருந்தார். சகல விடயங்களும் தெரிந்தவனாக ஒரு ஊடகவியலாளன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஒரு ஊடகவியலாளர் அறிக்கையிடுபவராக இருப்பதையும் தாண்டி செயல்படுபவனாக இருக்க வேண்டும் என்பது ஊடகவியலாளர் சிவராமின் எதிர்ப்பார்ப்பாகும்.
சிவராம் தமிழ் தேசியத்தில் பேசப்படுபவராக இருப்பதற்கு இன்னுமொரு காரணம்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கததுக்கு அவரளித்த பங்களிப்பாகும். இது அனேகருக்கு தெரியாது.
பத்து வருடங்களுக்குப் பிறகு மூச்சு விடக்கூடிய கட்டத்தில் இருந்து கொண்டு சிவராமை நினைவு கூறுகின்றோம்.
சிவராம்; கண்ட கனவை எப்படி நாம் நினைவாக்கப் போகின்றோம்? சிறந்த ஊடகவியலை எவ்வாறு உருவாக்கப் போகின்றோம் என்பதில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025